வியாழன், 23 ஜூலை, 2015

கலந்தாய்வு கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு வலுக்கிறது வகுப்பை புறக்கணிக்க ஆசிரியர் சங்கங்கள் முடிவு

கலந்தாய்வு மற்றும் நிர்வாக மாறுதல் நிபந்தனைகளை தளர்த்தாவிட்டால், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதம் நடக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, இந்த ஆண்டு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், புதிய விதிமுறைகள் கொண்ட அரசாணையை அரசு அறிவித்துள்ளது. இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஏமாற்றம்இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் கூறியதாவது:கலந்தாய்வு விதிமுறைகள் ஏமாற்றம் அளிக்கின்றன. வட்டார வள மைய மேற்பார்வையாளர்களாக இருந்தவர்கள், வள மையம் கலைக்கப்பட்டு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக வெகு தூரத்தில் பணியமர்த்தப்பட்டனர். தரம் உயர்த்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களும், தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இவர்ளுக்கு, இந்த கலந்தாய்வில், அருகில் இடம் மாற வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிய வேண்டும் என, அரசின் திடீர் நிபந்தனையால், 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் சபிதாவிடம் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். நிபந்தனைகளை எதிர்த்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர், நேற்று, மாவட்டத் தலைநகரங்களிலும், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்தினர். 27ம் தேதியும் போராட்டம் நடத்த உள்ளனர்.அச்சம்தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் கூறுகையில், ''கலந்தாய்வுக்கு முன், நிர்வாக ரீதியான மாறுதல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் இடமாறுதலில் ஊழல் நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களிடம் கருத்து கேட்காமல், நெறிமுறைகளை மீறி கலந்தாய்வு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,'' என்றார்.'கலந்தாய்வு நிபந்தனையில் மாற்றம் கொண்டு வராவிட்டால், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்' என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்