அரசு நலத்திட்டங்களில் ஒன்றான விலையில்லா சைக்கிள் தயார்நிலையில் இருந்தும், அரசு உத்தரவு கிடைக்காததால் மாணவர்களுக்கு வினியோகிக்காமல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பராமரிப்பு இல்லாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, இலவச சைக்கிள், லேப்-டாப், காலணி, அட்லஸ், சீருடை, பென்சில், புத்தகப்பை உள்ளிட்ட, 14 வகையான நலத்திட்டங்களை கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தி வருகிறது. நலத்திட்ட பொருட்களில், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதுவது சைக்கிள்.
கடந்த மே மாதமே, மாணவர்களுக்கு வினியோகிக்க வேண்டிய சைக்கிள்களின் உதிரி பாகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகிக்கப்பட்டுவிட்டது. மே இறுதிக்கு முன்பே, உதிரி பாகங்கள் இணைக்கப்பட்டு, வினியோகிக்க, தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் தாண்டியும், இப்பணி துவக்கப்படவில்லை.
ஒரு பள்ளியில், பிளஸ் 1 பிரிவுகளுக்கு தகுந்தபடி, 100 முதல் 300 சைக்கிள் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில், இடவசதியின்மையால் போதிய பாதுகாப்பு இல்லாமல் மழையிலும், வெயிலிலும் காய்ந்தபடி பாதுகாப்பு இல்லாமல் உள்ளன.மாணவர்கள் ஆவலுடன் புதிய சைக்கிள்களை காத்திருக்கும் நிலையில், போதியபராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாமல், துரு பிடிக்கும் நிலையில் வைத்திருப்பது சரியல்ல.
இலவச சைக்கிள் வினியோக திட்டத்தை முதல்வர் சென்னையில் துவக்கிவைத்து அனுமதி அளித்த பின்பே, மாவட்டங்களில் வினியோகிக்கும் பணிகளை துவக்கவேண்டும். அதுவும், அந்தந்த பகுதி எம்.எல்.ஏ., - எம்.பி., கவுன்சிலர் போன்றோரை அழைத்து, நிகழ்ச்சி நடத்தி வினியோகிக்கவேண்டும். இதனால், இரண்டு முதல் ஐந்து மாதங்கள் வரை காலதாமதம் ஏற்படுகிறது. தலைமையாசிரியர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ள சில பள்ளிகளில், வகுப்பறைகள் இல்லாமல் இருக்கும் நிலையில், சைக்கிள்களை வகுப்பறைக்குள் நிறுத்தி வைத்திருப்பது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், எங்கள் பள்ளியில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. நிறுத்துவதற்கு இடம் இன்மையால், வெளியில் நிறுத்திவைத்துள்ளோம். அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு கிடைத்ததும், மாணவர்களுக்கு வினியோகித்துவிடுவோம்,என்றார்.

0 comments:
கருத்துரையிடுக