ஆதார் அட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் உதவிகள், சலுகைகள் பெறுவது உள்ளிட்ட அனைத்துக்கும் முக்கியமானதாக உள்ளது. கைரேகைப் பதிவுகள், கருவிழிப் பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருப்பதால் அதை அடிக்கடி மாற்ற முடியாது. குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை விரைவில் கண்டுபிடிக்க போலீசாருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இந்நிலையில், போலீசாருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து காவலர்களின் ஆதார் அட்டை நகல்களையும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என கமிஷனர் அலுவலக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு வேப்பேரியில் உள்ள புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. இதனால், போலீசார் தங்களது ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பித்து வருகின்றனர். சம்பளத்துடன் ஆதார் எண் விரைவில் இணைக்கப்பட உள்ளது. ஆதார் அட்டை நகல் வழங்காத போலீசாரின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக