திங்கள், 27 ஜூலை, 2015

அறிவியல் ஆய்வக வாகனங்கள் முடக்கம்-

முன்னோடி திட்டமாக துவங்கப்பட்ட, நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனங்கள், 13 மாவட்டங்களில் பழுதாகி கேட்பாரற்ற நிலையில் உள்ளன.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், தனி கட்டடங்களில் உள்ளன. ஆனால், எட்டாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில், அறிவியல் ஆய்வகங்கள் இல்லை. எனவே, மாவட்டங்களில், நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை விரிவுபடுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
சில ஆண்டுகளுக்கு முன், 15 மாவட்டங்கள் அளவுக்கு, இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும், 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு, அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டன.இந்த வாகனத்தில், டி.வி.டி., - எல்.சி.டி., மற்றும் புராஜக்டர் உட்பட, அனைத்து வித அறிவியல் உபகரணங்கள், ரசாயன உப்பு மற்றும் அறிவியல் செய்முறை பயிற்சிக்கான மூலப்பொருட்கள் இருக்கும். இந்த வாகனம், தினமும் ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளிக்கு செல்லும். பின், ஆய்வக பணியிலுள்ள உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி, பட்டதாரி ஆசிரியர் இணைந்து, மாணவ, மாணவியருக்கு அறிவியல் செய்முறை பயிற்சிகளை செய்து காட்டுவது வழக்கம்.
ஆனால், தற்போது மொத்த முள்ள, 15 வாகனங்களில், 13 வாகனங்கள் பழுதாகி, ஓட முடியாத அளவுக்கு ஓரம் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள, இரண்டு வாகனங்களில், கோவை மாவட்டத்திற்கு மட்டுமே டிரைவர் உள்ளார்.
'அதிகாரிகள், டிரைவர் மற்றும் பயிற்சி ஆசிரியர் இல்லாமல், திண்டாட்டம் நிறைந்த திட்டமாக இது முடங்கிக் கிடக்கிறது' என, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
அறிவியல் ஆய்வகங்களில், பட்டப்படிப்பில் அறிவியல் படித்த நடுநிலைப் பள்ளி ஆசிரியரை, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அந்தஸ்தில் அமர்த்த, அரசு உத்தரவிட்டது.
ஆனால், அறிவியல் படிக்காத பட்டதாரிகளையே அதிக அளவில் நியமித்துள்ளனர். 15 மாவட்ட அதிகாரிகளில், ஐந்து பேர் மட்டுமே அறிவியல் படித்தவர்கள்.
அறிவியல் படித்தவர்களுக்கு, நடமாடும் அறிவியல் ஆய்வகத்தில் முன்னுரிமை கொடுத்தால், மாணவர்களுக்கு அறிவியல் ரீதியாக, ரசாயன செயல்முறைகளை நேரில் செய்து காட்ட வசதியாக இருக்கும். இதேபோல் பழுதான வாகனங்களையும் விரைவில் சரிசெய்ய வேண்டும்.
சிங்காரவேல் , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழக தலைவர்
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்