வெள்ளி, 17 ஜூலை, 2015

ஆசிரியர் வாய்ஸ் சிவக்குமார் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலருக்கு அனுப்பிய சட்டப்பூர்வமான அறிவுறுத்தல்

ஆசிரியர் வாய்ஸ் சிவக்குமார் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலருக்கு அனுப்பிய சட்டப்பூர்வமான அறிவுறுத்தல் அனுப்புநர்: தேதி:17.07.2015. 
போ.சிவக்குமார் 
உதவி ஆசிரியர் 
ஊ.ஒ.தொ.பள்ளி 
வ.மேட்டூர்
பெறுநர்:
கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் அவர்கள்
மங்களூர் ஒன்றியம்
இராமநத்தம்.
அம்மா,
வணக்கம் நான் வள்ளிமதுரம் பஞ்சாயத்து வ.மேட்டூர் ஊ.ஒ.தொ.பள்ளியில் 16.7.2009 முதல் பணியாற்றி வருகிறேன். பணியேற்ற நாள் முதல் 21.11.2009 அன்று அஞ்சல் அலுவலக எண்.650181 மேற்கண்ட எண்ணில் மாதம் ரூ.500 என்ற முறையில் RD 500 பிடித்தம் செய்யப்பட்டு வருகின்றது. மேற்கண்ட அஞ்சல் எண்ணில் என் சொந்த கையொப்பமிட்டு 6/12 அன்று ரூ.7500 நான் விடுவித்துள்ளேன். ஆனால் அதே ஆண்டு 11/12 அன்று என்னுடைய கையொப்பமிட்டு எனது RD கணக்கை முடித்துள்ளனர். கையொப்பமிட்டவர் யார்? அதற்க்கு உடந்தையாக இருந்தவர் யார்? அலுவலக மேற்பார்வையாளர் என்ற முறையில் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் என்ற முறையில் தாங்களும் அதற்கு உடந்தை என்று எண்ணத் தோன்றுகிறது. மேற்க்கண்ட தவறுகளை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன், மேற்க்கண்ட தவறுகளை தங்கள் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட போலி கையொப்பமிட்டு RD கணக்கு கையாடல் செய்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கையாடல் செய்த எனது RD கணக்கு தொகையினை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.இல்லாத பட்சத்தில் சட்டபடியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி வரும் என்பதை இதன் மூலம் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்