இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் மதிப்புமிகு.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் மறைவை அடுத்து தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளதாக நேற்று இரவு 9.30 மணி முதலே பெரும்பாலான தொலைகாட்சிகள் செய்திகளை வெளியிட்டு வந்தன. இன்று காலை 7.00 மணி வரையிலும் கூட சில தொலைக்காட்சிகள் விடுமுறை செய்தியை வெளியிட்டன. இன்றைய சில நாளிதழ்களும் “பள்ளிக்கல்வித் துறை விடுமுறை அறிவிப்பு” என்ற செய்தியை வெளியிட்டுள்ளன. திடீரென்று 7.30 மணிக்கு சில தொலைக்காட்சிகள் கேள்விக்குறியுடன் விடுமுறை செய்தியை வெளியிட்டன. 8.00 மணிக்கு “தந்தி” தொலைகாட்சியில் அரசுப் பள்ளிகள் வழக்கம் போல் வேலை செய்யும் என்ற பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் அறிவிப்பு வெளியாகிறது.
நம்முடைய ஆதங்கம் இதுதான்... பெரும்பாலான மக்கள் தொலைக்காட்சிச் செய்திகளை உண்மை என்று நம்புகிறார்கள். அதை உடனடியாக மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறார்கள். நேற்றிரவு தொலைக்காட்சிகள் வெளியிட்ட செய்தி தவறு எனில் உடனடியாக மறுப்பு அறிக்கை அதே தொலைக்காட்சிகளில் வெளியிடவேண்டியதுதானே... அல்லது இன்று காலை 6.30 மணிக்காவது தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட்டிருக்கலாமே? காலை 8.00 மணிக்கு “பள்ளிகள் வழக்கம் போல் வேலை செய்யும்” என்ற செய்தி வந்தால் ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் என்ன செய்வார்கள்? இதனால் கோடிக்கணக்கான மாணவர்களும், லட்சக்கணக்கான ஆசிரியர்களும், குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கு யார் பொறுப்பு? தவறான தகவலைத் மக்களுக்குத் தந்த தொலைக்காட்சிகளா? அல்லது அதைப் பற்றி உரிய நேரத்தில் கண்டுகொள்ளாத கல்வித்துறையா?
ஏற்கனவே கடந்த காலங்களில் பலமுறை மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டபோதும் பெரும்பாலான பள்ளிகள் தொலைகாட்சி செய்தியை அடிப்படையாகக் கொண்டுதான் விடுமுறை அறிவித்தன. அப்போது இதே கல்வித்துறை அரசாங்கம் விடுமுறை அறிவித்த பிறகு பள்ளிகள் வேலை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலமுறை எச்சரிக்கை செய்துள்ளது. தொலைகாட்சி செய்திகள் உண்மையென நம்பி பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தகவல் கொடுக்கப்படுகிறது... இது வழக்கமான ஒரு நடைமுறைதான்... இப்போது பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி செய்திகளே உண்மை இல்லை என்ற நிலை உள்ள போது மக்கள் யாரைத் தான் நம்புவது???
நம் மனதில் எழும் கேள்வி இதுதான்.... பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பள்ளிக்கல்வித் துறையின் பெயரில் வந்த செய்திகளே தவறு எனும்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?
தலை சுற்றுகிறது...
எல்லாம் நம் தலை விதி!!!!! அவ்வளவுதான்....
தலை சுற்றுகிறது...
எல்லாம் நம் தலை விதி!!!!! அவ்வளவுதான்....

0 comments:
கருத்துரையிடுக