வியாழன், 30 ஜூலை, 2015

நாக்பூர் சிறையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்


 
Yakub Memon hanged in Nagpur central Jail
 
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற யாகூப் மேமனின் கருணை மனுக்களை மகாராஷ்டிர ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் நிராகரித்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.
 
அவருடைய மறுசீராய்வு மனுவும், உச்ச நீதிமன்ற அமர்வால் நிராகரிக்கப்பட்டது. நேற்று மீண்டும் கடைசிநேர கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்தார் யாகூப் மேமன்.
 
ஆனால் பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறையின் அறிவுரையின்படி, கருணை மனுவை நிராகரித்தார். மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவு அவசர மனு ஒன்றை யாகூப் மேமனின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.
 
நள்ளிரவு 2 மணிக்கு விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 3 மணியளவில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கவோ, தள்ளிப்போடவோ முடியாது என்று தண்டனையை உறுதி செய்தனர்.
 
அதன்படி, இன்று காலை சரியாக 6:30 மணியளவில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்