மதுரை மாவட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான வருமானவரி பிடித்தம் விவரங்கள் அதிகாரிகள் முறையாக தாக்கல் செய்யாததால் ஆசிரியர்களுக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மாவட்டத்தில் தொடக்க கல்வியில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் சம்பளம் பெறும்போதே, அதற்கான வருமான வரியை 'இ பைலிங்' முறையில் அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், அலுவலக கிளார்க்குகள் மூலம் செலுத்தப்படும்.
இதுதொடர்பாக ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் பிடித்தம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால் வரி செலுத்தியும் அதற்கான 'இ பைலிங்' முறையை அதிகாரிகள் சரிவர மேற்கொள்ளாததால், ஆசிரியர்களின் வீட்டு முகவரிக்கு அபராதத்துடன் வருமான வரியை செலுத்துமாறு அத்துறை நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் ஜீவானந்தம் கூறியதாவது:வருமான வரியை பிடித்தம் செய்து அத்தொகையை செலுத்தும் பணி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் கிளார்க்குகளின் முக்கிய பணி. இரண்டு ஆண்டுகளாக இப்பணி முறையாக நடக்கவில்லை.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என தெரியவில்லை. இந்நிலையில் ஆசிரியர்களுக்கும் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பப்பட்டுஉள்ளது. குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

0 comments:
கருத்துரையிடுக