சனி, 11 ஜூலை, 2015

வெங்கனூர் பள்ளியில் முப்பெரும் விழா

திட்டக்குடி:திட்டக்குடி அடுத்த வெங்கனூர் அரசு உயர் நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம், புதிய இருக்கைகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடும் விழா என முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் சுவாமி முத்தழகன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாலகிருஷ்ணன், ஊராட்சித் தலைவர் அய்யாக்கண்ணு, பட்டதாரி ஆசிரியர்கள் சரவணன், புஷ்பா முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் துரை வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியர்கள் தானியேல், ஆனந்தி, சாந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், பள்ளிக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருக்கைகளை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கிய எம்.எல்.ஏ., தமிழ் அழகனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உழைத்த ஆசிரியர்கள், தலைமைஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வம், கணினி ஆசிரியர் ராஜமணிகண்டன், நாககன்னி, இளநிலை உதவியாளர் வெங்கடேசன், ஆய்வக உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.பட்டதாரி ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்