வியாழன், 30 ஜூலை, 2015

மத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் சுப்பிரமணிய பாரதி

மத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் தமிழகத்தைச் சேர்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் புகைப்படம் இடம் பெற உள்ளது.
இந்தியாவில் புகழ்பெற்ற தலைவர்களின் புகைப்படங்களை அஞ்சல் தலைகளாக வெளியிட்டு அவர்களுக்கு மத்திய அரசு மரியாதை செலுத்தி வருகிறது. 6 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஞ்சல் தலையில் புதிய மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் புகைப்படம் அஞ்சல் தலையில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான முடிவு தகவல் மற்றும் ஒளிபரபரப்புத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தலைமையில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, புதிய அஞ்சல் தலையில் மகாகவி சுப்பிரமணிய பாரதி, ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தா, பகத்சிங் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் விரைவில் அஞ்சல் தலைகளாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்