புதன், 12 ஆகஸ்ட், 2015

14, 15ல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும், 14, 15ம் தேதிகளில், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின், 69வது சுதந்திர தினம், வரும், 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமைக்கு முதல் நாள், அரசு விடுமுறை தினமாக வரும் போது, ஆசிரியர்கள், மூன்று நாட்கள் சேர்த்து விடுமுறை எடுத்து விடுவர்.
அதை தவிர்க்க, இந்த ஆண்டு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும், சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையிலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், அரசு பள்ளிகளில், வரும், 14, 15ம் தேதிகளில், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினமான, 15ம் தேதி, கட்டாயம் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்