நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தவறிய மாணவர்கள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள மறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு மேல்நிலைப் பொதுத் தேர்வில் தோல்வியுற்ற, உடனடித் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 12-ஆம் வகுப்புத் தேர்வுகளை நேரடியாக எழுத விரும்பும் 17 வயதடைந்த மாணவர்களும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பொதுதேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து தனித்தேர்வர்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு அரசுத் தேர்வு சேவை மையங்களும் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதில், குன்னூர் கல்வி மாவட்டத்தில் உதகையில் சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெண்களுக்கும், உதகை அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்களுக்குமாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கூடலூர் கல்வி மாவட்டத்தில் புனித பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெண்களுக்கும், கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசுத் தேர்வு மையங்களுக்கு நேரடியாகச் சென்று ஆகஸ்ட் 13 முதல் 19-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக