செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

பிளஸ் 2-வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு செப்டம்பரில் தேர்வு

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதம் தனித் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் (‘‘எச்’’ வகை), பத்தாம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும், 1.10.2015ல் பதினாறரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடி தனித் தேர்வர்களாக (‘எச்பி’’ வகை) தேர்வர்களாக விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
மேற்கண்ட தேர்வு எழுத விரும்புவோர் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு தேர்வு சேவை ைமயங்களுக்கு நேரில் சென்று 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். ‘‘எச்’’ வகைத் தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் 50 வீதம் தேர்வுக் கட்டணம், இதர கட்டணம் 35 செலுத்த வேண்டும். ‘‘எச்பி’’ வகை தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் 150, இதரக் கட்டணம் 35 மற்றும் 2, சேர்த்து 187 செலுத்த வேண்டும். மேற்கண்ட இரண்டு வகை தேர்வர்களும் ஆன்லைன் கட்டணமாக தலா 50 செலுத்த வேண்டும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்