ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

காலி பணியிடங்கள் மறைப்புஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில், காலியிடங்கள் மறைத்த, தமிழக அரசை கண்டித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நேற்று, மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் இடமாறுதல், கலந்தாய்வு நடந்தது. தர்மபுரியில் நடந்த கலந்தாய்வில், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், முக்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட அரசு பள்ளிகளிகளில் காலியாக உள்ள, தமிழ், கணிதம், தாவரவியல் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக, கலந்தாய்வில் கலந்து கொண்ட, 36 ஆசிரியர்களும், கலந்தாய்வை புறக்கணித்து வெளியேறினர்.
இதையடுத்து, கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களிடம் சாமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மீண்டும் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். ஆனாலும், காலி பணியிடங்கள் காட்டப்படாததை அடுத்து, காலி பணியிடங்களை மறைத்த, தமிழக அரசை கண்டித்து, தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்