சனி, 29 ஆகஸ்ட், 2015

பணிநிரவல் நடைமுறைகளில் வேண்டும் மாற்றம்.

தற்போது மாறுதல் கலந்தாய்வு என்று பேச்சு எழுந்தாலே முதலில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மனதில் எழும் கேள்வி இந்த ஆண்டு பணிநிரவல் உண்டா? என்பது தான்.
· ஆனால் பணிநிரவல் என்பது முறையான விதிமுறைகள் பின்பற்ற படுகின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லத்தோனுகிறது.
· ஏனென்றால் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில்பணிநிரவல் என்பது ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்னார் கணக்கிடப்பட்ட அதாவ்து முந்தைய கல்வி ஆண்டில் மத்தியில் அதாவது செப்டம்பர் 30 ந்தேதியின் அடிப்படையிலான மாணவர் எண்ணிக்கையைக்கொண்டு ஒரு பள்ளிக்கு தேவையான ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டுக்கு நிர்ணயம் செய்யப்படுவதுதான் முரன்பாடாக உள்ளது.
· பணிநிரவல் என்பது நடைமுரையில் உள்ள கல்வியாண்டின் சேர்க்கை முடிவு மாதமான ஜூலை 31 நாள் அடிப்படையாகக்கொள்ளவேண்டும் என்பதே சரியாக இருக்கும்.
· மேலும் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையில் முப்பதின் மடங்கு களுக்கு ஒன்று இரண்டு ஆசிரியர் குறைவாக இருந்தாலே ஆசிரியர் பணியிடக்குறைப்பு என்பது விந்தையாக உள்ளது.
· அதாவது 88 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளியில் 91 மாணவர்கள் இல்லை என்றும்,அதேபோல் 118 மாணவர் உள்ள பள்ளியில் 121 மாணவர்கள் இல்லை என கணக்கெடுத்து ஓர் ஆசிரியர் பணியிடத்தைக்குறைப்பது முறையா?
· முந்தையா ஆண்டு மாணவர் எண்ணிக்கையைக்கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கும் போது, பணிநிரவல் செய்யும் நாளில் அப்பள்ளியில் அம்மாத மாணவர் எண்ணிக்கை R T E அடிப்படையில் போதுமானதாக உள்ள போதும் பணியிடக்குறைப்பை செய்வது நியாயமா?
· அவ்வாறு தற்போதைய மாணவர் எண்ணிக்கையைக்கணக்கில் கொண்டு பணியிடக்குறைப்பைக் கைவிட தலைமை ஆசிரியர் முயற்சி மேற்கொண்டால்,அதற்கு பலனாக பணப்பயன் பெறுவதிலேயே அதிகாரிகள் ,மாவட்டதொடக்கக்கல்வி அலுவலக ஊழியர்கள் கருத்தில் கொண்டே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்துள்ளன.
· அதற்கும் மேலாகபல்வேறி இடங்களில் ஆண்டு தோறும் இது நடப்பதால் இதனை தினமலர் நாளிதழ் உள்நோக்கத்தோடு நடைபெறும் செயல் என ”தில்லாலங்கடி” எனத்தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு உள்ளது.
· மேலும் கட்டாயக்கல்வி உரிமை ச்சட்டப்படி எப்போழுதும் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்புள்ளதைக்கவனத்தில் கொள்ள வேண்டும்
எனவே வரும் காலங்களில் பணிநிரவல் என்பது பணிநிரவல் நடைபெறும் கல்வி ஆண்டின் ஜூலை 30 ம் தேதியைக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் முப்பதின் மடங்கிற்கு நிர்ணயித்துள்ள அளவினை விட மாணவர் எண்ணிக்கை 5 எண்ணிக்கை குறைவாக இருந்தால் பணியிடக்குறைப்பை கைவிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை. அரசுப்பள்ளி மாணவர் நலன் சார்ந்து 14 வகையான விலையில்லா நலத் திட்டங்களை செயல் படுத்தும் இவ்வரசு இதனையும் அரசுப்பள்ளி மாணவர் நலன் கருதி கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே நமது அவா.
கட்டுரையாளர்-கே.பி ரக்‌ஷித்.மாநில துணைத்தலைவர்
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்