புதிதாக பணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் அவர்கள் சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டங்களில் தான் பணியமர்த்தப்படுகின்றனர்.இனிவரும் பணிநியமனங்களும் அவ்வாறே நடைபெறும்.வேறு மாவட்டம் என்பது வேறு மாநிலம் அல்ல.ஆசிரியர் கூட்டுறவு சங்கங்களிலே அவர்கள் படும்பாடு சொல்லிமாளாது.சுயமரியாதையை மறந்தால்தான் அவர்கள் கடன்பெற முடியும்.இரண்டு வெளிமாவட்ட ஆசிரியர்களின் தங்களுக்குள் ஜாமின் கையொப்பமிட்டு அளிக்கும் விண்ணப்பங்கள் குப்பைத்தொட்டிக்குத்தான் போகும்.உள்மாவட்ட ஆசிரியர்களிடம் ஜாமின் கையொப்பம் பெறவேண்டும் என்ற பழைய பஞ்சாங்கம் இன்னும் தொடர வேண்டுமா?மாவட்ட பதிவு மூப்பு பணிநியமனம் நடைமுறையில் இருந்தால் ஆசிரியர்கள் சொந்த ஒன்றியங்களில் பணிநியமனம் பெறும் சூழ்நிலையில் சொந்த ஒன்றிய ஆசிரியர்களிடம் ஜாமின் கையொப்பம் பெறுவதில் எந்த பாதிப்பும் இருக்கப்போவதில்லை.மாறாக மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநியமனம் பெறும் சூழ்நிலையில் சொந்த ஒன்றிய ஆசிரியர்களிடம் ஜாமின் கையொப்பம் பெறவேண்டும் என நிர்பந்தப்படுத்துவது வெளிமாவட்ட ஆசிரியர்களின் சுயமரியாதையை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது.ஆசிரியர் சங்கங்கள் இப்பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.ஆசிரியர்கள்சுயமரியாதையுடன் கடன்பெற வழிவகை செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக