-அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவரை தலைமை ஆசிரியர் தாக்கியது தொடர்பாக கல்வி மாவட்ட அதிகாரி விசாரணை நடத்தினார்.
அருப்புக்கோட்டை அண்ணாமலை தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் காளிதாஸ்,15. அங்குள்ள தனியார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டு பாடங்களை எழுதாததால் மாணவனை தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் முள் பிரம்பால் தாக்கி உள்ளார். மாணவன் வயிற்று பகுதி, கையில் கீறல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி சங்கரநாராயணன் மருத்துவமனை சென்று மாணவரிடமும், பள்ளி சென்று உடன் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி செயலாளரிடம் விசாரணை செய்தார். தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் விடுப்பில் சென்றதால் அவரிடம் விசாரணை செய்யவில்லை. மாணவன் காளிதாஸ், ""வீட்டு பாடம் எழுதவில்லை என்ற உடன் தலைமை ஆசிரியர் முள் பிரம்பால் என்னை அடித்தார். உடம்பில் கீறல் ஏற்பட்டு ரத்தம் வந்தது,''என்றார் .

மாணவனின் தாய் வசந்தி,"" மகனுக்கு ஏற்கனவே கிட்னி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை ஆசிரியர் முள் பிரம்பால் வயிறு மற்றும் கைகளில் அடித்துள்ளார், ''என்றார். பள்ளி செயலர் காசிமுருகன், ""மாணவர்களை அடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தபட்டு மாணவர்களின் செயல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை மீறி எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை. அப்படி நடந்து இருந்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்போம் ,''என்றார்.
கல்வி மாவட்ட அதிகாரி சங்கரநாராயணன்,"" விசாரித்ததில் முள் பிரம்பால் தலைமை ஆசிரியர் அடித்ததாக கூறினார். உடன் பயிலும் மாணவர்கள் அப்படி நடக்க வில்லை என்கின்றனர். மற்ற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் விடுப்பில் உள்ளார். தலைமை ஆசிரியர் விடுப்பு எடுப்பதாக இருந்தால் டி.இ.ஓ., மற்றும் சி.இ.ஓ., விடம் கூற வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் வந்ததும் விசாரணை செய்யப்பட்டு அதன் அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்பிக்கப்படும்,''என்றார். மாணவன் புகாரின்படி டவுன் போலீசார் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக