திங்கள், 21 செப்டம்பர், 2015

மருத்துவம் சார் படிப்பு 1,200 இடங்கள் காலி

சென்னை:பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நிறைவடைந்தது; 1,200 இடங்கள் காலியாக உள்ளன.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார் பட்டப் படிப்புகள் உள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங்கில் அரசிடம் உள்ள, 550 இடங்கள் உட்பட, 2,700 இடங்கள் நிரம்பின. சுயநிதி கல்லுாரிகளில் மீதமிருந்த, 4,500 இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், 14ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.


மொத்தமுள்ள, 7,200 இடங்களில், 1,200 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன; இந்த இடங்களை யாரும் எடுக்க முன்வரவில்லை. 'இதற்கான அடுத்த கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட
மாட்டாது; சுயநிதிக் கல்லுாரிகளே, மீதி இடங்களை நிரப்பிக் கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்