சனி, 12 செப்டம்பர், 2015

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1,2,4 தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 1,2,4, பி.எஸ்.ஆர்.பி மற்றும் வி.ஏ.ஓ. பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 1-க்கான தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்விற்கு அனைத்துப் பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணியும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரித் தேர்வு நடைபெறுகிறது. எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்