வியாழன், 3 செப்டம்பர், 2015

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 14 ஆசிரியர்கள் உள்பட 16 பேருக்கு நல்லாசிரியர் விருது

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 14 தலைமை ஆசிரியர்கள் உள்பட 16 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்க அரசு அறிவித்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி இன்று தெரிவித்தார்.
பள்ளிகளில் சிறப்பாக மாணவ, மாணவிகளுக்கு சேவைப்பணி செய்து வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் ஆசிரியர் தினம் செப்.5-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. எனவே பள்ளியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாணவ, மாணவிகளிடம் அன்போடு பழகி நல்ல வழிகாட்டு ஆசிரியராகவும் இருக்க வேண்டும். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் பணியாற்றிய பள்ளியில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவும், மாணவ, மாணவிகளுக்கு நவீன முறையில் கல்வி அளிப்பது போன்ற சேவைப்பணி செய்தவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் அறிவித்து அரசால்  வழங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரம்:
கீழராஜகுலராமன் அரசு மேல்நிலைப்பள்ளி-எம்.ராஜேந்திரன்(தலைமை ஆசிரியர்), விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி-எஸ்.ராஜசௌந்தரி (தலைமை ஆசிரியை), அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி-ச.பாண்டியராஜன் (தலைமை ஆசிரியர்), சாத்தூர் ஏ.வி.மேல்நிலைப்பள்ளி-சோ.வரதராஜன், மம்சாபுரம் சி.நா.மேல்நிலைப்பள்ளி-ஆர்.அலுசோடை, விருதுநகர் ஹாஜி பி.செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளி - சி.இப்ராஹீம்(முதுகலை ஆசிரியர்), கோப்பைநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - ச.ரமேஷ்(தலைமை ஆசிரியர்), லிங்காபுரம் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - மா.அன்னராணி(தலைமை ஆசிரியை), ஜமீன்சல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - சு.முத்து(தலைமை ஆசிரியர்), கூத்திப்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - ர.அரங்கசாமி(தலைமை ஆசிரியர்), ஏ.ராமலிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-ஆர்.ரமாதேவி (பட்டதாரி ஆசிரியை), நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி-ஏ.லலிதாம்பிகை(தலைமை ஆசிரியை), துலுக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - வ.நாகலட்சுமி(தலைமை ஆசிரியை), குன்னூர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - ஆ.முருகேசன்(தலைமை ஆசிரியர்), முகவூர் காமராஜ்நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - பிளாக்ஸ் நகோமி(தலைமை ஆசிரியர்), ஆவியூர்   சுந்தரம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி-கி.சாரதி(முதல்வர்) ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கிறது.
சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள எம்.ஜி.ஜி.மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் 5-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது பெருகிற ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் முடிப்பு, தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவைகள் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்