வியாழன், 3 செப்டம்பர், 2015

நேற்று நடைபெற்ற நாடு தழுவிய போராட்டத்தில் 15 கோடி அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பங்கேற்பு


தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் மத்திய, மாநில தொழிற்சங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சுமார் 15 கோடி பேர் பங்கேற்றதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்தினால் வங்கி சேவைகள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் செய்ய கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள 10 தொழிற்சங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டன.

பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் தேசிய முன்னணி தொழிலாளர் சங்கம் ஆகியவை வேலைநிறுத்தத்தை புறகணித்தன. வேலைநிறுத்தத்தில் 23 பொதுத்துறை வங்கிகளும், 12 தனியார் வங்கிகளும், 52 பிராந்திய கிராமப்புற வங்கிகளும், 13 ஆயிரம் கூட்டுறவு வங்கிகளும் பங்கேற்றன.

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி உள்ளிட்ட 5 வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை. இந்த வேலைநிறுத்தத்தால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, கோவா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்