ஆதார் அட்டை பெறுவதற் கான பணிகளை விரைவுபடுத்து வதற்கு தமிழகத்தில் கூடுத லாக 200 பணியாளர்கள் ஆதார் மையங்களில் நியமிக்கப் பட்டுள்ளனர்.
முதலிடத்தில் பெரம்பலூர்தமிழகத்தில் உள்ள 522 மையங்களில் இதுவரை 84.54 சதவீதம் பேர் ஆதார் அட்டைக் காக பதிவு செய்துள்ளனர். அதா வது 5 கோடியே 69 லட்சத்து 97 ஆயிரத்து 351 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 5 கோடியே 32 லட்சத்து 4 ஆயிரத்து 315 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பெரம்ப லூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. (2011 கணக்கெடுப்பின் படி 5 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு தற்போது ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது). குறைந்தபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 73.97 சதவீதம் பேர் பதிவு செய்துள்ளனர்.ஆதார் பணிகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வரும் பெல் நிறுவனத் துடனானஒப்பந்தம் அக்டோபர் மாதம் முடிவடைவதாக இருந் தது. ஆனால், ஆதார் பணிகள் மேலும் இருப்பதால் தற்போது அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் மாதம் வரை அவகாசம் உள்ளது.எனவே டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 118 மையங்களில் கூடுதல் கணினி கள் பொருத்தப்பட்டன. காஞ்சி புரம் மாவட்டத்தில் பள்ளி மாண வர்களுக்கு பள்ளிகளிலேயே சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் பள்ளிகளில் ஆதார் மையங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
டிசம்பர் மாதத்துக்குள்..
இந்நிலையில் டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிப்பதற்காக ஆதார் மையங் களில் பணியாற்ற கூடுதலாக 200 பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இணை இயக்குநர் கிருஷ்ணா ராவ் கூறும்போது, “எந்தெந்த மையங்களில் பணிகள் தேக்க மடைந்துள்ளனவோ அந்த மையங்களில் 200 பேர் பணிகளை முடிக்க உதவுவார்கள். வரும் வாரங்களில் மேலும் கூடுதலாக பணியாளர்களை பெல் நிறு வனம் நியமிக்கவுள்ளது” என்றார்.

0 comments:
கருத்துரையிடுக