திங்கள், 7 செப்டம்பர், 2015

களம் புதிது நல்லாசிரியர் விருது-2015


களம் புதிது நல்லாசிரியர் விருது-2015
---------------------------------
வசந்த் கீழப்பாலையூர் பள்ளியில் (கம்மாபுரம் ஒன்றியம்,கடலூர் மாவட்டம்)பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்.மாற்றத்தையும் மேம்பாட்டையும் கற்பித்தலில் புதுமையையும் விரும்பும் இவ்விளம் ஆசிரியர் தான் பணிபுரியும் அரசுப்பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றியமைத்துள்ளார்.
நண்பர்கள்,தன்ஆர்வலர்கள்,கல்வியில் அக்கறை கொண்ட சான்றோர்களைப் பயன்படுத்தி ஆறு லட்சம் ரூபாய் செலவில் ஏசி வசதி ஆர்.ஓ சிஸ்டம்,வண்ண விளக்குகள்,ஓவியங்கள்,
வெள்ளை போர்டு,தளவாட சாமான்கள் என பள்ளியை புதுப்பித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தன்று 300 மரக்கன்றுகளை நட்டுள்ளார்.தன்னிடம் படித்து பத்தாம் வகுப்பில் 477 மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவனின் மேற்படிப்பு செலவை தானே செய்து வருகிறார்.
தன்னிடம் பயிலும் பல மாணவர்களின் பெற்றோர்கள் குடிநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மாலை நேரங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்வுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.இவர் குறித்த தகவல்களை இவ்வார புதிய தலைமுறைக் கல்வி இதழ் வெளியிட்டு பாராட்டியுள்ளது.காஞ்சி தமிழ்ச் சங்கம் முகநூலை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதைப் பாராட்டி இவருக்கு முகநூல் வேந்தர் விருது அளித்துள்ளது.ஊடகத்துறை நண்பர்கள் இதுபோன்ற அர்ப்பணிப்பு உள்ளம் படைத்த இளைஞர்கள் மீது வெளிச்சம் விழச்செய்ய வேண்டியது அவசியம்.குடிநோயாளிகளுக்கு கௌன்சிலிங் அளிக்கக் கூடியவர்களும் வசந்த்துக்கு உதவி செய்யுஙகள்.
இளம் வயதில் ஆற்றலோடும் ஆர்வத்தோடும் செயல்படும் வசந்த்துக்கு களம்புதிது நல்லாசிரியர் விருது அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.நிகழ்வு செப்டம்பர் 12 அன்று எளிமையான முறையில் நடைபெறும்.Vasanth Girijaவை வாழ்த்துவோம்.
பி.கு- கடந்த ஆண்டு இவ்விருது Mariajoseph Johnbasco விற்கு வழங்கப்பட்டது!
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்