புதன், 9 செப்டம்பர், 2015

பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆயிரம் குறைவு: மென்பொருள் மூலம் கண்காணிப்பு

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் குறைந்துள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 அதன்படி, கடந்த 2010-11-ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் 56,113 பேர் கண்டறியப்பட்டனர். 2015-16-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 33,686-ஆகக் குறைந்துள்ளது.
 வீடுவாரியாகக் கணக்கெடுப்பு, விழிப்புணர்வு முகாம், தரமானகல்வி போன்றவற்றின் மூலம் 100 சதவீத குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மென்பொருள் மூலம்... பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் அவரவர் வயதுக்கும், கற்றல் அடைவுத் திறனுக்கும் ஏற்ப மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படுவர். 
 அவ்வாறு மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள பிரத்யேக மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.
 புகைப்படத்துடன்கூடிய மாணவர் விவரம், மாணவரின் பெற்றோர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனரா, மாணவர் பள்ளிக்கு எத்தனை நாள்கள் வரவில்லை உள்ளிட்ட விவரங்கள் இந்த மென்பொருள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. 
 அந்த மாணவர் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சிப் பெறுவது வரை அவரது கற்றல் விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 கடந்த 2014-15-ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளில் 42,245 பேர் சிறப்புப் பயிற்சி மையம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டப் பள்ளிகள், நேரடிச் சேர்க்கை ஆகிய வழிகளில் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். 
 இந்தக் குழந்தைகளின் கல்விக்காக ரூ.22 கோடி செலவிடப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்