அறிவியல் கண்காட்சியில் கரியசோலை அரசுப் பள்ளி மாணவி ஆர்.சபிதாவின் கண்டுபிடிப்பு மாநில அளவில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
நாமக்கல்லில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது.
இதில், கூடலூரை அடுத்துள்ள கரியசோலை அரசுப் பள்ளி மாணவி ஆர்.சபிதா கண்டுபிடித்த சூரிய சக்தியைப் பயன்படுத்தி விவசாயப் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் கருவி, மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
சபிதாவை, பள்ளித் தலைமை ஆசிரியர் பூபதி, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

0 comments:
கருத்துரையிடுக