புதன், 9 செப்டம்பர், 2015

குரூப் 3, 4 பணிகளுக்கு நேர்காணல் ரத்து, மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொது நிர்வாக முதன்மை செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு தலைமை வகித்து இணை அமைச்சர் ஜிதேந்திர நாத் பேசியதாவது: சுதந்திர தின உரையில் நேர்காணல் ரத்து பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
துறை வாரியாக எழுத்துத் தேர்வு நடந்த பிறகு தேவைப்படும் பணிகளுக்கு மட்டும் நேர்காணல் நடத்தப்படும். கடைநிலை பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசுகள், பொதுத் தேர்வு ஆணையம், அரசு ஊழியர் தேர்வு ஆணையம் ஆகியவற்றிற்கு தகவல் அனுப்பி உள்ளோம். நேர் காணல்கள் பல நேரங்களில் திறமையாக  கையாளப்படுவது இல்லை. நேர்காணலில் பல மாற்றங்கள் நடக்கிறது. இதனால் ஊழல் பெருகுகிறது. 

இதனை தடுக்க வேண்டி நேர்காணலை ரத்து செய்ய தீர்மானம் செய்துள்ளோம். இளநிலை உதவியாளர் தேர்வுகளான குரூப் 3, குரூப் 4 ஆகியவற்றில் நேர்காணலை ரத்து செய்தால், ஆதாரம் இல்லாதவர்களும், சமுதாய, பொருளாதார நிலையில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களும் பலனடைவார்கள். கடந்த 18 மாத ஆட்சியில், உறுதிச் சான்றிதழ் பெற வேண்டி அரசு அதிகாரிகளை அணுகுவதை நிறுத்தி விட்டோம். பதிலாக, தனக்குத்தானே உறுதிச் சான்று அளிக்கும் திட்டம் தொடங்கி உள்ளோம். ஓய்வூதியத்தில் புதிய நடைமுறை கொண்டு வந்துள்ளோம். முதல் கட்டமாக இந்த நடைமுறை பற்றிய பயிற்சிகளை காஷ்மீர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் சோதனை முறையில் நடத்தினோம். அதன் வெற்றியைத் தொடர்ந்து பிற மாநிலங்களில் இது நடமுறைக்கு வரும். என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்