ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

பெண் கல்வி திட்டம்ரூ.55 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களின் கல்வி ஊக்குவிப்பு திட்டத்திற்கு, 55 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கியுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் பள்ளி சேர்க்கையை, 100 சதவீதம் உறுதிப்படுத்தவும், 

'பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 2011 - 12ம் கல்வி ஆண்டு முதல் செயல்படும் இத்திட்டத்தில், 3ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும், ஆதிதிராவிட, பழங்குடியின பெண் குழந்தை களுக்கு, ஊக்க உதவித்தொகையாக, ஒவ்வொரு மாதமும், 50 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு, 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக, இந்த நிதிஆண்டில் அரசு, 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

மேலும், மாணவியர், பள்ளியில் இருந்து இடை நிற்பதை தவிர்க்க, 6ம் வகுப்பு மாணவியருக்கு மாதம், 100 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு, 1,000 ரூபாய்; ௭ம், 8ம் வகுப்பு மாணவியருக்கு, 150 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு, 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக, நடப்பு கல்வியாண்டில், 38 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்