கடலுார்:கடலுார் மாவட்டத்தில், மாநில நல்லாசிரியர் விருதுக்கு, 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு, நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடலுார் மாவட்டத்தில், இந்த ஆண்டுக்கான, நல்லாசிரியர் விருதுக்கு, 1௧ பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் விவரம்:கடலுார், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் திருமுகம், சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் சுந்தரலிங்கம், பெண்ணாடம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி,காட்டுமன்னார்கோவில் பருவத ராஜகுல பள்ளி பட்டதாரி ஆசிரியர் சிவநேசன், நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் அனுசுயா,
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி அளவில், பரங்கிப்பேட்டை, கிள்ளைப்பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வேதரத்தினம், வெங்கடாம்பேட்டை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன்,
கண்டரக்கோட்டை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், வல்லம்படுகை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தா, பூலாமேடு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேவி, பேத்திரமங்கலம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, வரும் 5ம் தேதியன்று, சென்னையில் நடக்கும் ஆசிரியர் தின விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக