வியாழன், 10 செப்டம்பர், 2015

ஆதார் பதிவை டிசம்பருக்குள் முடிக்க உத்தரவு


தமிழகத்தில் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான விவரங்களை பதிவு செய்யும் பணியை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயித்து, கடந்த 2013-ல் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் கடந்த ஆண்டு நம்பரில் சென்னையில் 72 மையங்கள் என தமிழகம் முழுவதும் 521 ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டன.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி தமிழகத்தில் 5 கோடியே 47 லட்சம் பேருக்கு (81.20 சதவீதம்) ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 5 கோடியே 1 லட்சம் பேருக்கு (74.36 சதவீதம்) ஆதார் அட்டை கள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் வரத்து அதிகமாக இருந்ததை யடுத்து, கடந்த ஜூலை மாதம் 118 இடங்களில் கூடுதல் கருவிகளுடன் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் ஆதார் எண்ணுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கூடுதலாக தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதில் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை டிசம்பர் மாதத்துக்குள் எட்ட இருக்கிறோம். அதற்காக கூடுதலாக தற்காலிக ஆதார் மையங்களை தமிழகம் முழு வதும் திறக்க தமிழக அரசின் அனுமதியை கோரியிருக்கிறோம். சென்னைக்கு மட்டும் தற்போது அனுமதி கிடைத்துள்ளது.
அண்ணாநகரில் ஜெ.ஜெ.ஸ்டேடியம், வளசரவாக்கம் ரவுண்ட் பில்டிங், அமைந்தகரை எம்.எச்.காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அம்பத்தூரில் 81-வது வார்டு அலுவலகம், காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் தற்காலிக மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 27 ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உடனே பதிவு
இந்த தற்காலிக மையங்களில் விண்ணப்பத்துடன் வருவோரின் விவரங்களை உடனே பதிவு செய்து அனுப்புமாறு ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை கொடுத்துவிட்டு சில நாட்கள் கழித்து வர வேண்டிய அவசியமில்லை. சென்னையில் மேலும் பல இடங்களை அடையாளம் கண்டு இந்த சேவை விரிவு படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்