புதன், 16 செப்டம்பர், 2015

‘எங்களுக்கு இப்பொழுதுதான் தீபாவளி’- சாதிச் சான்று பெற்ற பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி!


முதல் தலைமுறையாக சாதிச் சான்று பெற்றுள்ள இருளர் பழங்குடியின மாணவர்களின் பெற்றோர் ‘எங்களுக்கு இப்பத்தான் தீபாவளி’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில், இருளர் இன மக்களின் பிள்ளைகள் 25 பேருக்கு ஆட்சியர் ஆர்.நந்தகோபால் சாதிச் சான்று வழங்கினார். முதல் தலைமுறை யாக சாதிச் சான்று பெற்றுள்ள இவர்கள் அனைவரும் நேற்று மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

பழங்குடியின சாதிச் சான்றுகள் வழங்குவதில் இருக்கும் நடைமுறை சிக்கல், காலதாமதம் போன்றவற் றால் சாதிச்சான்று கிடைக்காமல் ஏராளமான பழங்குடியினர் தவித்து வருகின்றனர். தற்போது 25 இருளர் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெற்றதால், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இனி நல்லபடியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

சாதிச் சான்று கிடைத்த மகிழ்ச்சியில் சேட்டு என்பவர் கூறும்போது, ‘‘நாங்கள் அனை வரும் அணைக்கட்டு அடுத் துள்ள ஊனை இருளர் காலனியைச் சேர்ந்தவர்கள். எங்கள் கிராமத்துக்கு அருகில் நாராயணபுரம், வெங்கட சாமி ரெட்டியூர் உள்ளிட்ட பகுதியில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் உள்ளன.

அணில், எலியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு வந்த நாங்கள் மற்றவர்களைப்போல வாழ முயற்சிக்கிறோம். எங்களில் பலர் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். நாங்கள் பட்ட கஷ்டம் இனி எங்கள் பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது என்பதற்காக பள்ளிக்கு அனுப்புகிறோம்.

எனது பிள்ளைகள் வல்லரசு (6-ம் வகுப்பு), அஸ்வினி (5-ம் வகுப்பு), அமுதா (4-ம் வகுப்பு), மனோஜ் (2-ம் வகுப்பு) படிக்கிறார் கள். இவர்களுக்கு சாதிச் சான்று வாங்கிவிட்டேன். அரசாங்கம் கொடுக்கும் எல்லா சலுகையும் இனி இவர்களுக்கும் கிடைக்கும் என்று கேட்கும்போது சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

சாதிச் சான்று கேட்டு 10 மாதங்களுக்கும் மேலாக நடையாக நடந்தோம். எங்களுக்கு இல்லாவிட்டாலும் எனது பிள்ளை களுக்கு சாதிச் சான்று கிடைத்திருப் பதால், இப்பத்தான் எங்களுக்கு தீபாவளி’ என்றார்.

புகைப்படத்துடன் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழில் தங்களது பெயரை உச்சரித்துப் பார்த்த சிறுவர், சிறுமிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்