வெள்ளி, 25 செப்டம்பர், 2015

பி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை www.tnteu.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதமும், செய்முறைத் தேர்வுக்கு ரூ. 600 என்ற அளவிலும் கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை "பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை' என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலையாக செலுத்த வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 26 கடைசித் தேதியாகும். கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அபராதத் தொகை ரூ. 150 சேர்த்து நவம்பர் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்