கோவை :''கல்வி கற்பித்த ஆசிரியரை மதிக்கும் பண்புடையவர்கள் அறிவில் சிறந்தவர்களாகவும், சமுதாயம் மதிக்கும் மனிதர்களாகவும் விளங்குவர்,'' என, பேராசிரியர் சூரியநாராயணன் பேசினார்.தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் சார்பில், நுால் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, தமிழ் இலக்கிய பாசறை தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். நலச்சங்க தலைவர் கிருஷ்ணராஜ் வரவேற்றார்.கவிஞர் கோவை கிருஷ்ணா எழுதிய, 'வண்ணத்துாரிகைகளும் வர்ணசாலங்களும்' என்ற கவிதை நுாலை பேராசிரியர் சூரியநாராயணன் வெளியிட, சமூக சேவகர் சம்பத்குமார் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக, தென்மாநில ஓவியர்கள் 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது. 'பாவேந்தர் பாரதிதாசன் விருது' கவிஞர் கவிதாசனுக்கு வழங்கப்பட்டது.
கோவை அரசு கலைக்கல்லுாரி முன்னாள் பேராசிரியர் சூரியநாராயணன் பேசுகையில், ''ஆசிரியர் பணியில் உள்ள ஆத்ம திருப்தி வேறு எந்த பணியிலும் இருக்காது. தன்னிடம் படித்த மாணவர்கள் மருத்துவர்கள், இன்ஜினியர்கள், ஆட்சிப்பணி அதிகாரிகள் என, பல்பேறு உயர்ந்த பதவிகளில் இருப்பதை பார்க்கும்போது, ஆசிரியர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதனால் தான், மாதா, பிதா, குரு, தெய்வம் என, கடவுளுக்கு இணையாக ஆசிரியர்களை வைத்தனர். தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியரை மதிக்கும் பண்புடையவர்கள் தான் அறிவில் சிறந்தவர்களாகவும், சமுதாயம் மதிக்கும் மனிதர்களாகவும் விளங்குவர்,'' என்றார்.

0 comments:
கருத்துரையிடுக