வெள்ளி, 11 செப்டம்பர், 2015

முதல்வர் பரிசு தொகை திட்டம்; மாணவர்களின் விண்ணப்பம் வரவேற்பு


சென்னை: முதல்வரின் பரிசு தொகை வழங்கும் திட்டத்திற்கு, மாணவ, மாணவியரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு முதல்வரின் பரிசு தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு, ஒரு மாணவருக்கு 3,000 ரூபாய் வீதம், தொடர் கல்வி படிப்பு முடியும் வரை வழங்கப்படுகிறது.


நடப்பு ஆண்டுக்கு, பிளஸ்2 வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு, 1,087; மாணவியருக்கு, 1,106 என, மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகை பெற, பிளஸ் 2 வகுப்பில், தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து, பிளஸ் 2க்கு பிறகு அல்லது ஓராண்டு இடைவெளிக்கு பின், மேல்படிப்பை, சென்னை மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையத்தில் படிப்பவராக இருக்க வேண்டும்.

தகுதியுடைய சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர், தங்கள் விண்ணப்பத்துடன் மதிப்பெண் மற்றும் சாதி சான்றிதழ் நகலை இணைத்து, தற்போது படிக்கும் கல்வி நிறுவன தலைவரின் கடிதத்துடன் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்