மங்களூர்: கர்நாடகாவில் கையில் கட்டுடன் உள்ள 8 வயது மாணவனை, வேதப்பாட ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையில் காயமடைந்து கட்டு போட்டிருந்த நிலையில் காணப்படும் மாணவனை, மற்ற மாணவர்களின் முன்னிலையில், ஆசிரியர் ஒருவர் அடிக்கிறார். மாணவன் தாமதமாக வந்ததால், ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சோமசுந்தரம் என்ற அந்த ஆசிரியர் மீது, தலிப்சேவா சம்தி என்ற அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
கடந்த மே மாதம், மங்களூரில் உள்ள பஞ்ச லிங்கேஸ்வர கோயில் வேத பள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சி தற்போது, சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

0 comments:
கருத்துரையிடுக