வெள்ளி, 4 செப்டம்பர், 2015

செவிலிய பட்டயப் படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்:


செவிலிய பட்டயப் படிப்பு மூன்றாம் ஆண்டு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பே மாணவிகள் நான்காம் ஆண்டு செயல்முறை பயிற்சி (internship) வகுப்புகளுக்குச் சென்றுவிட்டனர். தமிழகத்தில் 23 அரசு செவிலிய பட்டயப் படிப்பு நிறுவனங்களும், சுமார் 170 தனியார் நிறுவனங்களும் உள்ளன.  தேர்வு: மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் சுமார் 4,500 மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு நடைபெற்று தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஜூலை 23-ஆம் தேதி நிறைவு பெற்றது. தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியும் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு நர்சிங் போர்டு வெளியிடவில்லை என்று மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
 தேர்வா? பயிற்சியா?: மூன்றாம் ஆண்டு தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே நான்காம் ஆண்டுக்கு செல்ல முடியும். நான்காம் ஆண்டில் ஆறு மாத கால செயல்முறை பயிற்சியில் ஈடுபடவும் முடியும். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களும் செயல்முறை பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், ஒரு பாடத்துக்கு மேல் தோல்வி அடைந்தவர்கள் ஆறு மாதத்துக்குப் பின்பு நடைபெறும் மறுதேர்வில் பங்கேற்க வேண்டும். மறுதேர்வில் வெற்றி பெற்ற பின்பு செயல்முறை பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
 ஆனால், இப்போது தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பே மாணவிகள் அனைவரும் நான்காம் ஆண்டு செயல்முறை பயிற்சிக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். தேர்வு முடிவுகள் வெளியான பின்பு தோல்வி அடைந்தவர்கள் பயிற்சியில் இருந்து விடுபட்டு மீண்டும் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயிற்சியைத் தொடர முடியுமா அல்லது மீண்டும் தேர்வுக்குத் தயாராக வேண்டுமா என்று மாணவிககள் குழப்பத்தில் உள்ளனர்.
 இது குறித்து மாணவிகள் சிலர் கூறியதாவது:
 தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்பு தேர்வில் தோல்வி அடைந்தது தெரியவந்தால், செயல்முறைப் பயிற்சியை நிறுத்திவிட்டு, மீண்டும் எழுத்துத் தேர்வுக்கு தயாராக வேண்டும். மேலும் ஒரு மாதத்துக்கும் மேல் மருத்துவமனையில் செய்த செயல்முறை பயிற்சிகளும் வீணாகப் போய்விடும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.
 தாமதம் ஏன்?: செவிலியப் பட்டயப் படிப்பு நிறுவனங்களில் உள்ள ஆள்பற்றாக்குறை, நர்சிங் போர்டில் ஏற்பட்டுள்ள நிர்வாகக் குளறுபடிகள் ஆகிய காரணங்கள் தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கத்தைவிட இந்தப் பணிகளும் தாமதாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும் என்று செவிலிய ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
 இது குறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
 மூன்றாமாண்டு மாணவிகளுக்கான தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்