வியாழன், 3 செப்டம்பர், 2015

"மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிப்பேன்': தேசிய நல்லாசிரியர் விருது ஆசிரியர் உருக்கம்

ஈரோடு: ""எதிர் காலத்தில் பணியில் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் தரும் தூணாக இருப்பேன்,'' என, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள, ஈரோடு, குமலன் குட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தனபால் தெரிவித்தார்.


மேலும், அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அமானி மல்லாபுரம் பகுதி, என் சொந்த ஊர். எம்.ஏ.,- எம்.எட்.,- எம்.ஃபில்., படித்துள்ளேன். 1997ல், அரசு ஆசிரியர் பணி கிடைத்தது. காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றினேன். அங்கு, 9 மாதம் பணியாற்றி விட்டு, மொடக்குறிச்சி ஒன்றிய அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், 2006 வரை, பணியாற்றினேன். பின், ஈரோடு, குமலன் குட்டை, அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறேன். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமை, கல்வியில் முன்னோடியாக கொண்டுள்ளேன். பணியில் சேர்ந்தபோது, ஆங்கில வகுப்பு மாணவர்கள் அனைவரையும், தேர்ச்சி பெற வைக்க வேண்டும், என்ற எண்ணத்தில் கடும் பயிற்சி கொடுத்து, கைடு தயாரித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தேன். முதல் முயற்சியில், 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். ஈரோடு, சி.இ.ஓ., அய்யண்ணன் ஆலோசனைப்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்க, கைடு தயாரித்தேன். இரவு, பகலாக, முக்கிய கேள்வி - பதில்களை புத்தகத்தில் தேர்ந்தெடுத்து, கேள்வி பதில்களை தொகுத்தேன். இந்த கைடு, மாணவர்கள் மத்தியில் பெரும் பங்களிப்பை தந்தது. 1998 முதல் இன்று வரை, என் வகுப்பில், ஆங்கில பாடத்தில், 100 சதவீத தேர்ச்சி பெற செய்தேன். அதற்காக, 2012ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில விருது கிடைத்தது. தவிர, ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்காக, ஸ்பான்சர் பெற்று, உதவி செய்து வருகிறேன். படிப்பு தொடர்பான பொருட்கள் தேவைப்படும் போது, எனது சொந்த செலவில் மாணவர்களுக்கு வழங்குகிறேன். வரும், 5ம் தேதி, தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு, எனக்கு வழங்க உள்ளது. எதிர்காலத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அப்துல்கலாம் போல் அனைத்து மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வேண்டும் என்பதே எனது லட்சியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்