,சமூக ஊடகங்கள் வழியாக பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை 90 நாட்கள் வரை பத்திரமாக வைத்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு ரத்து செய்தது.வரைவு கொள்கை
வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், கூகுள் சாட், யாகூ மெசஞ்சர், வைபர், லைன் போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் தகவல்களை அனுப்புவது அதிகரித்து வருவதால் அவற்றை ஒழுங்குபடுத்தும் வகையிலும், சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்துடனும் மத்திய அரசு நேற்று முன்தினம் ஒரு வரைவு கொள்கையை வெளியிட்டது.அதன்படி சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் வழியாக பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களையும், உரையாடல்களையும் 90 நாட்கள் வரை அனைவரும் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும் என்றும், அந்த தகவல்களை போலீசாரோ, மற்ற விசாரணை அமைப்பினரோ கேட்கும்போது தரவேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்தை தெரிவிக்கும்படியும் மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருந்தது.கடும் எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த புதிய கொள்கை முடிவுக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுகிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின.இந்த நிலையில் சமூக ஊடகங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை 90 நாட்கள் வரை பத்திரப்படுத்தி வைக்கவேண்டும் என்று விதித்த கட்டுப்பாட்டை நேற்று மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:–திரும்பப் பெற கடிதம்
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வரைவுக் கொள்கை மீது தெரிவிக்கப்பட்ட விமர்சனங்கள், கவலைகள் குறித்து எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது ஒரு வரைவு கொள்கைதானே தவிர மத்திய அரசின் கோட்பாடு அல்ல.எனினும், இந்த புதிய வரைவு கொள்கை மீது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தேவையற்ற, தவறான எண்ணத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தி விட்டது. எனவே மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் நிபுணர்கள் குழு வெளியிட்ட இந்த வரைவு கொள்கையை திரும்பப் பெறுமாறு அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.இது தொடர்பான வரைவு கொள்கை முறைப்படி மேற்கொள்ளப்படும். அதன்பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

0 comments:
கருத்துரையிடுக