வெள்ளி, 18 செப்டம்பர், 2015

ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்துக்கு: இ-சேவை மையங்களில் புதிய வசதி


ஆதார் அட்டை வைத்திருப்போர் இ-சேவை மையங்களில் தங்களது இ-மெயில் மற்றும் செல்போன் எண்களை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தலைமைச்யெலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை  மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.

இச்சேவை மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த 13,28,647 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுமட்டுமின்றி இச்சேவை மையங்கள் மூலமாக 4,36,352 நபர்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த 337 சேவை மையங்களிலும் ஆதார் அட்டையினை பதிவு செய்யும்போது வழங்கப்பட்ட கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியினை மாற்றம் செய்ய விரும்புவோர் இச்சேவை மையங்களை அணுகி தங்களது புதிய கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை பத்து ரூபாய் செலுத்தி மாற்றம் செய்துக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்தப்புதிய சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்