ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப் பருவம் முக்கியமானது. முதன்முதலாக தாய், தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி புத்தரிசி அல்லது நெல்லில் அட்சரம் எழுதத் தொடங்கிய நாளை மறக்க இயலாது. வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய், தந்தையரால் தர முடியாத கல்வி, பயிற்சியைக் கல்வி மூலமாக ஆசிரியரால்தான் தர முடியும் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளவும் இளமையில் கல் என முதுமொழி நமக்கு உதவுகிறது.
மாறி வரும் காலச் சுழலில், கல்வி இன்றி நல்ல வாழ்வே இல்லை என்ற நிலை உள்ளது. படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அதைச் சொல்லித் தரும் ஆசிரியர் ஆவர். உலகில் முதன்மை பெற்றவன் இறைவன். எழுத்தில் முதன்மை பெற்றது அகரம். அந்த அகரத்தைக் கற்றுத் தருவதால் ஆசிரியரும் இறைவனே. தூய அறிவை நல்கும் ஆசிரியரின் தாள் பணிந்து கல்வி கற்றால் நற்பயனை அடையலாம் எனத் திருவள்ளுவர் தன் முதல் அதிகாரத்திலேயே கூறியுள்ளார். இவ்வளவு பெருமைகளையுடைய ஆசிரியர்களை போற்றி வணங்கும் நன் நாளே ஆசிரியர் தினமாகும்.
மற்ற விசேஷமான தினங்களைப் போல ஆசிரியர் தினம் உலகம் முழுவதிலும் ஒரே நாளில் கொண்டாடப்படவில்லை. பலநாடுகள் பலவித மாதம், தேதிகளில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகின்றன. அதைக் கொண்டாட காரணங்களும் வெவ்வேறு விதமாகத்தான் உள்ளன. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் ஆசிரியர் தினம் கொண்டாடும் பழக்கம் வந்தது. அந்த நாடுகளில் உள்ளூர் ஆசிரியர்களைப் பாராட்டும் நாள்தான் ஆசிரியர் தினம் என அழைக்கப்பட்டு வருகிறது.
ஆர்ஜென்டீனாவில் டொமின் கோ பாஸ்டினோ சர்மியன்டோ என்ற கல்வியாளர் இறந்த தினமான செப்டம்பர் 11-ஆம் தேதிதான் 1915 முதல் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கல்வியாளரும், தத்துவ மேதையும், குடியரசு முன்னாள் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக 1962 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆர்மினீயா, அஜர்பைஜான், பல்கேரியா, கனடா, எஸ்டோனியா, ஜெர்மனி, லிதுவேனியா, மாலத்தீவுகள், மோரீஷஸ், மால்டோவா குடியரசு, நெதர்லாந்து, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், குவைத், கத்தார், ருமேனியா, ரஷியா, செர்பியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அக்டோபர் 5-ஆம் தேதிதான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மொராக்கோ, அல்ஜீரியா, டுனீசியா, லிபியா, எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா, ஏமன், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 28}இல் தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதைத் தவிர, உலக ஆசிரியர்கள் தினம் அக்டோபர் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பண்டைக்கால குருகுலக் கல்வி முறையில் ஆசிரியர், மாணவர்கள் உறவு முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஆறு வயது முதல் இளைஞர் வரை கல்வி, கேள்வி, போர் முறைகள், ஆன்மிகம், அரசியல், வேத பாடங்கள் வரை முறையாகப் பயிற்சிகள் தரப்பட்டு, ஒரு சிறந்த மனிதனாக உலகில் வாழ அடித்தளம் அமைக்கப்பட்டது. துரோணர், சுக்ராச்சாரியார் ஆகியோரிடம் பயின்ற மாணவர்கள் கற்ற வித்தைகள் ஒன்றுதான். ஆனால், அவர்கள் அதைப் பயன்படுத்திய விதம் வேறு.
கிருஷ்ணரும், ராமரும் மாணவர்களாக இருந்து, பின்பு அவரவர் ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்த்தனர். பீஷ்மர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அகத்தியர், புத்தர், ஏசு, முகமது நபி ஆகியோர் அவரவர் காலங்களில் சிறந்த குரு, ஆசிரியர்கள் ஆவர்.
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தனது ஆசான் வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி பயின்றதையும், தன் குருவின் மேதா விலாசத்தைப் புகழ்ந்து தனது நூல்களில் கூறியிருப்பதும் என்றும் நினைவில் கொள்ளத்தக்கது. அதைப்போல், அவ்வை து. நடராஜனின் தந்தை அவ்வை துரைசாமி பிள்ளை தனது ஆசான் உ.வே.சா. பற்றி தன் பேச்சுகளிலும், நூல்களிலும் சிலாகித்துக் கூறியிருப்பது ஆசிரியர் - மாணவர்களிடையே உள்ள நல்லுறவை மெய்ப்பிக்கும் சரித்திரமாகும்.
கல்வி கணினிமயமாகிவிட்ட இந்தக் காலத்தில் பல்துறை விற்பன்னர்கள் பல்கிப் பெருகிவிட்ட காரணத்தால் ஒருவரே ஆசிரியர் என்ற நிலை மாறி ஒரு பாடத்துக்கு பல ஆசிரியர்கள் என்ற நிலை வந்துவிட்டது. குரு - சிஷ்யன் என்ற நிலை மாறி மாணவ நண்பர்கள் என்ற நிலை வந்துவிட்டது. ஆராய்ச்சிப் பிரிவுகளில் மட்டும் ஆசிரியர் - மாணவர் உறவு நிலை மாறாமல் இருப்பது சற்று ஆறுதல்தான்.
சேகரிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே கணினி தர முடியும். புதிய சிந்தனைகளைத் தூண்ட ஆசிரியரின் போதனைகளே காரணம் என்பதை மாணவர்களும், மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றம் கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அமைகிறது. எழுத்தறிவின்றி ஒரு குடிமகன் இருந்தாலும் அந் நாடு உண்மையான நாடல்ல என கல்விப் பேரரசு மெüலானா அபுல் கலாம் ஆசாத் கூறியிருப்பது நினைவில் கொள்ளத்தக்கது.
இதே கருத்தைத்தான் குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் தனது பாணியில், "அனைவரும் கல்வி பெற கனவு காணுங்கள். உங்களைத் தூங்க விடாமல் செய்கின்ற கனவுகளைக் காணுங்கள். சிறந்த கல்வி பெறுங்கள். உங்களுடன் சேர்ந்து நாட்டையும் வல்லரசாக மாற்றுங்கள்' என்று அறைகூவல் விட்டுச் சென்றதை ஆசிரியர்களும் மாணவர்களும் மறக்க இயலாது. கடைசி மூச்சு உள்ள வரை உண்மையான ஆசிரியராக இருந்து மறைந்தார்.
நவீன காலத்தில், ஆசிரியர்களின் முன்னோடியான ராதாகிருஷ்ணன் 1888 செப்டம்பர் 5-ஆம் தேதி திருத்தணி அருகில் உள்ள கிராமத்தில் சர்வபள்ளி வீராச்சாமி, சீதம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். திருத்தணி, திருப்பதியில் பள்ளிக் கல்வி பயின்றார். வேலூரில் உள்ள ஊரீஸ் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலைத் தத்துவம் பயின்று முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.
தன்னுடைய மாமாவின் மகன் தத்துவப் பாடம் பயின்றதால் அந்தப் புத்தகங்களை இரவலாகப் பெற்று வறுமை நிலையிலும் சிறப்பாகப் பயின்று எம்.ஏ. தத்துவப் பாடத்தில் தன்னுடைய 20-ஆவது வயதிலேயே பட்டம் பெற்றார்.
1909-இல் சென்னை மாநிலக் கல்லூரியிலும், 1918-இல் மைசூர் பல்கலைக்கழகத்திலும், 1926-இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், 1929-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். தத்துவம், மதம் சார்ந்த துறைகளில் இந்தியாவுக்கும், மேலை நாடுகளுக்கும் பாலமாகத் திகழ்ந்தார். 1931-இல் "நைட்' பட்டமும், 1932-இல் "ஏல் ஆஃப் வெலிங்டன்' பட்டமும் பெற்றார். 1931-1936 வரை ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தொடங்கி, உலகின் புகழ்பெற்ற 32 கல்லூரி, பல்கலைக்கழகங்கள் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு கெüரவ டாக்டர் பட்டங்களை வழங்கி கெüரவித்துள்ளன.
வேதாந்தம், அத்வைதம் ஆகியவை பற்றி அவர் கூறிய கருத்துகள் முற்றிலும் புதுமையானவை. 1931-இல் சர் பட்டமும்,
1954-இல் பாரத ரத்னா விருதும், அதே ஆண்டில் ஜெர்மனியின் ஆர்டர் ஆஃப் மெரிட் பட்டமும் பெற்ற அவரது பிறந்த நாள் 1962 வருடம் முதல் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவர் எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள், இந்தியத் தத்துவம், தி ஹிந்து வியூ ஆஃப் லைப், கீழை மதங்களும் மேலைச் சிந்தையும், மதம் மற்றும் சமூகம் உள்ளிட்டவை மிக முக்கியமானவை. 1952 முதல் 1962 வரை குடியரசுத் துணை தலைவராகவும், 1962 முதல் 1967 வரை நம் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் பணியாற்றினார்.
ஒருவனுக்கு அழிவற்ற செல்வம் கல்விதான். மற்றவை செல்வமல்ல என்ற உண்மையைப் போதித்த ஆசிரியரை நாம் தினம் தினம் தொழுது பாடங்களைப் பயில வேண்டும். மேலும் படிப்பனவற்றை பழுது இல்லாமல் படிக்க வேண்டும் என்றும், செல்வம் உள்ளவர் இடத்தில் பணிந்து நின்றுகேட்பது போல் ஆசிரியரிடத்து மாணவர்கள் ஏக்கத்துடன் தாழ்ந்து நின்று கற்றால் கல்வியில் உயரலாம் என உலகப் பொது மறை கூறுகிறது.
மா.தச. பூர்ணாச்சாரி, மதுரை.

0 comments:
கருத்துரையிடுக