வியாழன், 3 செப்டம்பர், 2015

வருகிறது பாடத்திட்டத்தில் மாற்றம்


புதுடில்லி: விலங்குகளிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டது குஜராத் மாநிலம் தான். அங்கு தான் இம்முறை முதலில் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அம்மாநில அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விலங்குகளிடம் கருணை செலுத்த வேண்டியது பற்றி
வலியுறுத்த வேண்டும் எனவும், இதற்காக பிராணிகள் நலச்சங்கம் வகுத்து கொடுத்த பாடங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையே நாடு முழுவதும் உள்ள தங்கள் பள்ளிகளிலும் கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சண்டிகர், டில்லி, கோவா, கேரளா, அரியாணா, மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
பிராணிகள் நலச்சங்க கல்வி ஒருங்கிணைப்பாளர் பூஜா மகாஜன் கூறும்போது, ''விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று சொல்லித் தந்தாலே மற்றவர்களிடமும் குழந்தைகள் அன்பு செலுத்த துவங்கிவிடுவர். வன்முறை கலாசாரம் ஒழியும்'' என்றார்.
இப்பாடத்திட்டத்தில் விலங்குகளின் முக்கியத்துவம், அன்பு செலுத்த வேண்டியதன் அவசியம்,
வீடியோ, புகைப்படங்கள், விலங்குகள் பற்றிய கதைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே பிராணிகள் நலச்சங்கம் தயாரித்துக்கொடுத்த பாடக் குறிப்புகள், நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன. 50 லட்சம் குழந்தைகளை இவை சென்றடைகின்றன.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்