கேந்திரீய வித்யாலயா, ஜவஹர் நவோதயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ‘சி-டெட்' எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வினை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது.இந்த ஆண்டுக்கான முதலாவது சி-டெட் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 2-வது சி-டெட் தேர்வு தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட இந்தியா முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வெழுதுகிறார்கள். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு (தாள்-2) காலை 9.30 முதல் பகல் 12 மணி வரையும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு (தாள்-1) பிற்பகல் 2.30 முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும்.

0 comments:
கருத்துரையிடுக