சென்னை பல்கலை உட்பட தமிழகத்தில், மூன்று பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை பரிந்துரை செய்யும், மூன்று குழுக்களிலும், ஒரே உறுப்பினர் இடம் பெற்றுள்ளார்.
சென்னை பல்கலையின் துணைவேந்தர் தாண்டவன், ஜனவரி, 16ல் ஓய்வு பெறுகிறார். புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில், செனட் சார்பில், சென்னை பல்கலையின் முன்னாள் சிண்டிகேட்
உறுப்பினர் சுரேந்திர பிரசாத்; சிண்டிகேட் சார்பில், சென்னை பல்கலையின் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவரும், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் மானுடவியல் துறைத் தலைவருமான ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில், பாலசுப்ரமணியன் ஏற்கனவே, திருவள்ளுவர் பல்கலை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுக்களிலும் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக