சனி, 7 நவம்பர், 2015

ஜாக்டோவின் அவசரக் கடமை ...

அனைவரையும் திரட்டி
உறுதியாகப் போராட்டம்
காண வேண்டியது
ஜாக்டோவின் அவசர கடமை...
---------------------------------
ஊதிய முரண்பாட்டில்
முதுகலை ஆசிரியர்களுக்கு
15600 ஊதியக்கட்டும்,
இடைநிலை ஆசிரியர்களுக்கு
9300 ஊதியக்கட்டும் முரண்பாடு களைந்து
7 வது ஊதியக்குழு அமைக்கும் முன் விரைந்து அமல் செய்திட,
SG, BT, PG - அனைவருக்கும் CPS ரத்து செய்யப்பட்டு GPF அமல் செய்திட,
2004-06 இல் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய நாட்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி நியமனமான நாள் முதல் ஊதிய உயர்வு வழங்கிட,
இதர 15 அம்ச அனைத்து கோரிக்கைகளும்
வென்றெடுக்க-
SG, BT, PG - பழைய ஆசிரியர்கள் முதல் இன்று புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள தகுதிகாண் பருவத்தினர் - உட்பட அனைத்து நிலை ஆசிரியர்களும் 90% க்கு மேல் போராட்டத்தில் கலந்து கொண்டு - வெற்றி வாகை சூட என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமோ - அதை சங்க வேறுபாடு கடந்து - கோரிக்கைகளை மட்டுமே முதன்மைபடுத்தி நல்ல முடிவு இன்று ஜாக்டோ உயர்மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் ...
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்(08.10.2015) செய்யப்பட்ட போது
தொடக்க கல்வித்துறையில் 71% பங்கேற்க, பள்ளிக்கல்வித்துறையில் வெறுமனே 21% என மொத்தம் இரு துறையிலும்
47% மட்டுமே பங்கெடுத்துக் கொண்டனர். இந்த நிலை மாறி, இரு துறையிலும் கரம் கோர்த்து 90% ஆசிரியர்கள் கலந்து கொண்டு குரல் தர என்ன வழி என்று அழுத்தமான முடிவு அவசரமாக
காணப்பட வேண்டும் ...
கோரிக்கை வெல்லும் வரை தொடர் போராட்டமா?
விடுமுறை தினத்தில் அறவழியில் தொடர் உண்ணாவிரதமா?
2009ல் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களைய 1,00,000 பேர் ஓரிடத்தில் சென்னையில் கூடி கோட்டை நோக்கி மாபெரும் பேரணி சென்றது போல் பெரிய அணி திரட்சிப் போராட்டமா?(ஆனாலும் அன்று 750 சிறப்பு படி மட்டுமே தரப்பட்டது. முழுதும் களையப்படவில்லை)
ஆசிரியர்கள் நிலை மாற ஆசிரியர்களே போராடித்தான் பெற்றாக வேண்டிய நிலை
தேர்தல் வாக்குறுதி தந்து 4.5 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின்னரும் ஊதிய முரண்பாடு நீக்க அதிமுக அரசு இன்னும் நம்மை நாடிப்பிடித்து பார்தது மெளனம் காக்கிறது.
அன்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது மன்றாடாத குறையாக கேட்ட போது நிறைவேற்றாத திமுக, இன்று மறுபடி ஆட்சி பிடிக்கும் முனைப்பில் - 'ஆசிரியர்களின் கோரிக்கையை முழுதும் நிறைவேற்றும்' என புதிய தேர்தல் அறிக்கையை கூடிய விரைவில் வெளியிடவிருக்கிறது.
திமுகவின் பின்னால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நின்றது - திராவிடக் கொள்கைகளால் அல்ல. கோரிக்கை வைக்கும் போதெல்லாம் பரிசீலனை செய்து நிறைவேற்றினார்களே என்று தான்.
ஆசிரியனே ஏமாறாதே இனியும்...
முதுகலை ஆசிரியர்களுக்கு
15600 ஊதியக்கட்டும்,
இடைநிலை ஆசிரியர்களுக்கு
9300 ஊதியக்கட்டும் முரண்பாடு களைந்து
7 வது ஊதியக்குழு அமைக்கும் முன் விரைந்து அமல் செய்யப்படாவிட்டால் -
6 வது ஊதியக் குழுவில் ஒவ்வொருவரும் 8000 முதல் 12,000 வரை இழப்பும்,
பணிக்கு பொருத்தமில்லா குறைந்த ஊதியக்கட்டும்,
7 வது ஊதியக்குழுவில் கடைநிலை ஊதியமும் பெறப் போவது உறுதி.
6 வது ஊதியக்குழுவில் இழக்கும் 1 ரூபாய்
7 வது ஊதியக்குழுவில் 3 ரூபாய் இழப்பீட்டிற்கு சமம் என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்...
தமிழக மக்களது மனநிலை உணர்ந்து தமிழக முதல்வர் இலங்கை பிரச்சினைக்கு எதிராக வெற்றிகரமாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தது மாதிரி - cps அமல் செய்த முதல் மாநிலமான தமிழகமே - அரசு ஊழியர்களின் நலன் கருதி gpf ஆக மாற்றம் காண விரும்புகிறது என்று முதல் மாநிலமாக - சட்டமாக்கப்பட்ட cps க்கு எதிராக தமிழக சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் தரட்டுமே...
அவ்வாறு 'நம் கோரிக்கைக்கு செவி மடுத்து மனமுவந்து நிறைவேற்றித் தரும் அரசு எதுவோ - அவர்களுக்கு மட்டுமே மனதார வாக்களிப்போம்' என்று அனைவரையும் திரட்டி உறுதியாகப் போராட்டம் காண வேண்டியது ஜாக்டோவின்
அவசரக் கடமை ...
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்