WhatsApp Messenger அவ்வப்போது பல புதுமைகளை செய்து வருகிறது. இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது.
1. WhatsAppல உங்களுக்கு மிக முக்கியமான அல்லது பிடித்த மேசெஜ் எப்போதோ வந்து இருக்கும். அதை இப்போது பார்க்க நினைத்தால் விரைவில் பார்க்க முடியாது. ஆயிர கணக்கான மேசெஜ்கிடையே எப்படி கண்டுபிடிப்பது. சர்ச் செய்தாலும் பொறுமை வேண்டும். இனி அப்படி கஷ்டப்பட தேவை இல்லை. நீங்கள் விரும்பிய அல்லது முக்கியமான மேசெஜ்களை Starred Messages பகுதியில் இணைத்து விட்டால் உடனே படிக்க முடியும்.
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் உங்களுக்கு முக்கியமான மின்னஞ்சலை Starred செய்யும் வசதி இருக்கும். இதன் மூலம் Starred செய்த மின்னஞ்சலை மட்டும் தனியாக பார்க்க முடியும். இதே வசதியை WhatsApp இப்போது புதிய பதிப்பில் கொடுத்து உள்ளது. படம் பாருங்கள்.
இங்கே கிளிக் செய்து WhatsApp 2.12.366 இன்று வெளிவந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இது Play Storeக்கு வர சில தினங்கள் ஆகும். (இரண்டாவதாக உள்ளது Dropbox லிங்க் - மொபைலில் டவுன்லோட் செய்யும் போது எச்சரிக்கை செய்தி காட்டினால் Ignore செய்து விடுங்கள். Dropbox லிங்க் என்பதால் பெரும்பாலான மொபைல்கள் எச்சரிக்கை செய்யும்.)
இன்ஸ்டால் செய்த பிறகு WhatsApp உள்ளே செல்லுங்கள். மெனுவில் Starred Messages என்ற புதிய ஆப்சன் வந்து இருக்கும். அதன் உள்ளே சென்று பார்த்தால் வெற்றிடமாக இருக்கும். இப்போது ஏதேனும் நண்பர்கள் அல்லது குருப்ல உள்ள ஒரு மெசேஜை லாங் பிரஸ் செய்தால் மேலே ஒரு ஸ்டார் போன்ற குறியீடு வரும். அதை டச் செய்தால் Starred Messages பகுதியில் சேர்ந்து விடும். இனி நீங்கள் விரும்பிய மேசெஜ்களை ஸ்டார் செய்து விரைவில் பார்க்க முடியும். என்ன சந்தோஷம்தானே. கீழே வீடியோ தயாரித்து இணைத்து இருக்கிறேன் பாருங்கள்.
2. மொபைலில் Android 6.0 Marshmallow வைத்து இருப்பவர்கள் இனி WhatsApp புதிய பதிப்பின் மூலம் நேரடியாக யாருக்கும் வீடியோ, படங்கள் போன்றவற்றை விரைவில் Share செய்ய முடியும். இந்த வசதி மூலம் மற்ற அப்ளிகேசங்களுக்கும் தங்குதடையின்றி விரைவாக பெரிய வீடியோகளை அனுப்ப முடியும். இதனை WhatsApp Direct Share என்று அழைக்கிறார்கள். இந்த வசதி Android 6.0 மொபைல்களுக்கு மட்டுமே தற்போது சாத்தியமாம். இது பற்றி விரிவாக தனி பதிவில் பார்ப்போம்.
3. இப்போது WhatsApp 2.12.366 பதிப்பு முதல் WhatsApp Groupகளில் 200 மெம்பர் வரை இணைக்க முடியும். இந்த வசதி இப்போது டெஸ்டிங்ல இருக்கு. சென்ற ஆண்டு ஆரம்பத்தில் 50 மெம்பர்கள் மட்டுமே ஒரு குருப்ல இருக்க முடியும். WhatsApp நிறுவனத்தை Facebook வாங்கியதும் 50ல் இருந்து 100 மெம்பர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்று நீட்டிதார்கள், இப்போது 200 பேர் வரை இணைக்க முடியும். விரைவில் இந்தியாவில் இந்த வசதி வந்து விடும்.
இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.
நன்றி: ஸ்ரீராம், Thagavalguru.com




0 comments:
கருத்துரையிடுக