ஞாயிறு, 19 ஜூன், 2016

முதுகலை, தொழிற்கல்வி மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற ஆதார் அவசியம்


நாகர்கோவில்: அரசு  மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார்  தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும்  பிற்படுத்தப்பட்ட,  மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக  அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவி தொகை  வழங்கி வருகிறது. இதே போல் அரசு  மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை  பட்டப்படிப்பு பயிலும்  பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும்  சீர் மரபினர் மாணவ, மாணவிகளுக்கும் எந்த வித நிபந்தனையுமின்றி கல்வி உதவி  தொகை  வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற  பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல்  இருக்க வேண்டும்.  உதவி தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் அந்தந்த  கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி   நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.  விண்ணப்பத்துடன்  வங்கி கணக்கு எண்  மற்றும் ஆதார் எண் விவரங்களையும் தவறாமல் குறிப்பிட  வேண்டும்.

இது பற்றிய  விவரங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு  கொண்டு அணுகலாம். அரசு இணைய தளமான  www.tn.gov.in மூலம் அறிந்து கொள்ளலாம் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான்  கூறி உள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்