திங்கள், 11 ஜூலை, 2016

கூட்டுறவு தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் கூட்டுறவுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு உழைப்பூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2013 மார்ச் 22 முதல் ஏப்ரல் 24 வரை தேர்தல் நடந்தது. பால் வளத்துறைக்கு நடந்த தேர்தலில் மாவட்டம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேட்புமனு வழங்குதல், மனு பரிசீலனை, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அறிவித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 250 வீதம் ஊதியம் மற்றும் பயணப்படி வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை.
இதேபோல் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தது 300 குடும்பங்களில் கணக்கெடுப்பை மேற்கொண்டனர். அதற்கு பல மாவட்டங்களில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வழங்கவில்லை.
எனவே சிவகங்கை மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுத்து ஆதார் எண் இணைத்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்