வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

2 முறை 'நீட்' எழுதியவர்கள் அடுத்த தேர்வு எழுத தடை

'உச்ச நீதிமன்ற விதிகளை மீறி, இரண்டு முறை, 'நீட்' தேர்வு எழுதியவர்கள், எதிர்காலத்தில் தேர்வு எழுத முடியாது' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வான, நீட் தேர்வு, மே மாதம் நடந்தது. பின், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வை தவற விட்ட மாணவர்களுக்காக, ஜூலை, 24ல் மீண்டும் நடந்தது. 'ஏற்கனவே முதல்கட்ட தேர்வை எழுதியோர் விரும்பினால், இரண்டாம் கட்ட தேர்வை எழுதலாம். அதற்கு, முதற்கட்ட தேர்வு எண்ணை தாக்கல் செய்து, அதை ரத்து செய்ய வேண்டும்' என்பது உட்பட, சில நிபந்தனைகளை, உச்ச நீதிமன்றம் விதித்தது. முதல் நீட் தேர்வை எழுதிய ஆயிரக்கணக்கானோர், இரண்டாம் கட்ட தேர்வில் பங்கேற்றுள்ளனர். ஆனால், முதல் தேர்வு முடிவு குறித்து, சி.பி.எஸ்.இ.,க்கு தகவல் அளிக்கவில்லை. எந்த தேர்வு முடிவை ஏற்பது என, கடிதம் அனுப்பும்படி, சி.பி.எஸ்.இ., கோரியும், பலர் கடிதம் அனுப்பவில்லை. இந்நிலையில், 'இரண்டு தேர்வுகளையும் எழுதி, உச்ச நீதிமன்ற விதியை பின்பற்றாதோர், வரும் காலத்தில் நடக்கும் நீட் தேர்வை எழுத தடை விதிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்