சனி, 6 ஆகஸ்ட், 2016

பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

சென்னை: பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன், ஜூலையில் நடந்த துணை தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த வர்கள், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு மேல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்களின் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். இதே இணையதளம் மூலம், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். ஆக., 9 காலை, 10:00 முதல், 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்