குஜராத் அரசு ஊழியர்களுக்கு 7 வது சம்பள கமிஷன்
ஊழியர்களுக்கும் 7 வது சம்பள கமிஷனை அறிவித்துள்ளது.
இந்த புதிய சம்பள உயர்வு ஆகஸ்ட் 1 (இன்று) முதல் அமலுக்கு வருவதாகவும், இதனால் 8.77 லட்சத்திற்கும் அதிகமான குஜராத் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் சம்பள உயர்வு அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வர் ஆனந்திபென் பட்டேலுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்ற ஆனந்திபென் பட்டேலும் இந்த மாதம் முதல் மாநில அரசு ஊழியர்களுக்கும் 7 வது சம்பள கமிஷனை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 1 ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு இந்த சம்பள உயர்வு நிலுவை தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு கூறியதைப் போல், குஜராத் அரசு ஊழியர்களுக்கும் நிலுவை தொகையும் ஜனவரி 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் குஜராத் அரசு ஊழியர்களின் சம்பள விகிதம் 14.60 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

0 comments:
கருத்துரையிடுக