புதுமை கற்பித்தல் முறை
தேவகோட்டை: ஆசிரியர்களின் கற்பித்தலில் புதுமை செய்வது பற்றி, வித்தியாசமான முறைகளில் கற்பிக்கும் முறை, எளிமையாக புரியும்படி கற்பித்தல் தொடர்பான செய்திப்படத்தை எஸ்சிஇஆர்டி நிறுவனம் தயாரித்தது.
இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் வாசகம் நடுநிலைப்பள்ளியில் அனுபவம் புதுமை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட துறையினர் படம் பிடித்தனர். இது போன்ற பல பள்ளிகளில் திரட்டிய ஆவணப்படத்தை அரசு சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. பள்ளிகளுக்கு விரைவில் சிடி வழங்க உள்ளனர். இந்நிலையில் யூடியூபில் வெளியிட்டனர். யூடியூபில் வெளியிட்ட படத்தை சேர்மன் மாணிக்கம் வாசகம் பள்ளியில் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலையில் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

0 comments:
கருத்துரையிடுக